Home உலகம் வட கொரிய அதிபரைச் சந்திக்க டிரம்ப் ஒப்புதல்

வட கொரிய அதிபரைச் சந்திக்க டிரம்ப் ஒப்புதல்

1141
0
SHARE
Ad

வாஷிங்டன் – உலக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்திக்க வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்த அழைப்பை டிரம்பும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதத்திற்கு முன்பாக கிம் ஜோங்கைச் சந்திக்க விரும்புவதாக டிரம்ப் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக தென்கொரியா – வட கொரியா அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் நடந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப்படும் என கிம் ஜோங் அறிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பின் காரணமாகவே, டிரம்ப் – கிம் ஜோங் இடையிலான சந்திப்புக்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.