Home Featured தமிழ் நாடு எங்கே விஜயகாந்த்? தமிழக ஊடகங்கள் கேள்வி!

எங்கே விஜயகாந்த்? தமிழக ஊடகங்கள் கேள்வி!

899
0
SHARE
Ad

சென்னை – எங்கே விஜயகாந்த்? இதுதான் தற்போது தமிழக ஊடகங்கள் எழுப்பி வரும் கேள்வி!

சில நாட்களுக்கு முன்னால் அவர் சிங்கப்பூருக்கு சிகிச்சை பெறச் செல்லப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அந்தத் தகவலை மறுத்தார்.

ஒருகூட்டத்தில் பேசும்போது, “அவருக்கு தொண்டை, மூக்குப் பகுதியில் பிரச்சனை (டான்சில்). இங்கே சென்னையில் நல்ல மருத்துவர்கள் இல்லையா? இதற்காக ஏன் சிங்கப்பூர் செல்லவேண்டும்?” என பிரேமலதா கேள்வி எழுப்பியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் நாடெங்கிலும் சூறாவளியாகச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, கடந்த சில நாட்களாக விஜயகாந்த் எங்கும் தென்படவில்லை.

நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் நடந்த அரசியல் விவாதத்தின்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் விவாதிக்கும்போது “இப்போது விஜயகாந்த் எங்கே இருக்கின்றார்? எல்லாவற்றுக்கும் பிரேமலதாதான் பதில் சொல்லி வருகின்றார். அடுத்த முதலமைச்சர் என்று சொல்கின்றார்கள். ஆனால் அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.