Home Featured கலையுலகம் ‘தெறி’ முன்னோட்டத்தை பார்த்து விஜய்யை பாராட்டிய ரஜினி!

‘தெறி’ முன்னோட்டத்தை பார்த்து விஜய்யை பாராட்டிய ரஜினி!

741
0
SHARE
Ad

vijayvs rajinசென்னை – ரஜினி ‘கபாலி’ படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஷங்கர் இயக்கும் ‘2.ஓ’ படத்தில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையே நேரம் கிடைக்கும் போது இளம் நடிகர்களின் புதிய படங்கள் மற்றும் முன்னோட்டங்களை பார்க்கிறார். அது பற்றிய தனது நல்ல கருத்துக்கை கூறி இளம் நடிகர்– நடிகைகளை ஊக்குவித்து வருகிறார். அவர்களை பாராட்டவும் ரஜினி தவறுவதில்லை.

சமீபத்தில் விஜய்யின் ‘தெறி’பட முன்னோட்டத்தை ரஜினி பார்த்தார். அதை மிகவும் ரசித்த ரஜினி, உடனே விஜய்யையும், தெறி பட இயக்குனர் அட்லியையும் தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார்.

முன்னோட்டத்தில் அவர் பார்த்த நல்ல அம்சங்களையும், தன்னை ஆர்ச்சயப்படுத்திய விஷயங்களையும் குறிப்பிட்டு அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார். இதனால் விஜய் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ரஜினியின் பாராட்டு தங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.