Home Featured நாடு நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!

நஜிப்புக்கு சவுதி இளவரசர் 375 மில்லியன் அமெரிக்க டாலர் அன்பளிப்பா? – மறுக்கிறார் அமைச்சர்!

1023
0
SHARE
Ad

Tajuddinகோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை இரவு முதல் ஆஸ்திரேலியாவின் ஏபிசி செய்தி நிறுவனத்தின்போர் கார்னர்ஸ்’ நிகழ்ச்சி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டில் பல புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அவற்றில், கடந்த 2011-ம் ஆண்டு சவுதி இளவரசர், நஜிப்புக்கு 375 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கினார் என்றும், அதற்குச் சான்றாக சவுதி இளவரசர் எழுதிய கடிதம் ஒன்றையும் ஏபிசி நேற்று வெளியிட்டிருந்தது. அதனைத் தொகுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது மலேசியாகினி தகவல் ஊடகம்.

அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதியிட்ட அக்கடிதத்தில், இஸ்லாமியக் கோட்பாடுகளின் அடிப்படையில் மலேசியாவை ஆட்சி செய்து வருவதற்காக அன்பளிப்பாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும், இதனை விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயம், விவசாயம்  சார்ந்த தொழில் துறையின்  துணையமைச்சர்  தாஜுடின் அப்துல் ரஹ்மான், “நஜிப்பை வெறுப்பவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றார்கள். இதற்கெல்லாம் அவர் பதிலளித்துக் கொண்டிருந்தால், நஜிப்புக்கு உறங்குவதற்கும், தனது குடும்பத்துடன் (ரோஸ்மா) உரையாடுவதற்கும் கூட நேரமில்லாமல் போய்விடும்” என்று தெரிவித்துள்ளார்.