Home Featured தமிழ் நாடு தொகுதி பங்கீடு குறித்து சோனியா–ராகுலுடன் இளங்கோவன் ஆலோசனை!

தொகுதி பங்கீடு குறித்து சோனியா–ராகுலுடன் இளங்கோவன் ஆலோசனை!

612
0
SHARE
Ad

ilangaovan,சென்னை – தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த முறையும் அதேபோல் தொகுதிகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது. ஆனால் காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று விட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு 25 முதல் 30 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் மேலிட தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த வாரம் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியபோது தொகுதி பங்கீட்டில் முடிவு எட்டப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதுகுறித்து சோனியா மற்றும் ராகுல்காந்தியுடன் விவாதித்து 2–ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த விரைவில் சென்னை வர இருப்பதாக குலாம்நபி ஆசாத் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க.வுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மேலிட தலைவர்களுடன் விவாதிக்க நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலுவும் டெல்லி சென்றுள்ளார்.