Home Featured தொழில் நுட்பம் அமெரிக்காவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் வடிவத் துப்பாக்கி!

அமெரிக்காவில் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன் வடிவத் துப்பாக்கி!

635
0
SHARE
Ad

CexqoGVUsAAaJqpஹுஸ்டன் – அமெரிக்காவில் மின்னசோட்டாவை சேர்ந்த ஐடியல் கான்சீல் நிறுவனம் ஒரு புதுமையான கை துப்பாக்கியை வடிவமைத்துள்ளது. அதாவது இந்தத் துப்பாக்கி, ஸ்மார்ட் போன் வடிவில் உள்ளது.

இந்த இரட்டைக்குழல் 380 காலிபர் இரகத் துப்பாக்கி, இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 410 அமெரிக்க டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கைத்துப்பாக்கிக்கு அதிக தட்டுப்பாடு உள்ளது.

இதை அனைத்து இடங்களுக்கும் சுலபமாக எடுத்து செல்ல முடியும். இந்தத் துப்பாக்கியை ஸ்மார்ட்போன் போன்று மடித்து கையடக்கமாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

இதன் தயாரிப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது. விற்பனை அக்டோபரில் தொடங்கும் என ஐடியல் கான்சீல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிர்க் ஜெல்பெரிக் தெரிவித்துள்ளார்.