Home Featured இந்தியா என்னை திட்டுங்கள்; என் மகனை விட்டுவிடுங்கள் – விஜய் மல்லைய்யா வேண்டுகோள்!

என்னை திட்டுங்கள்; என் மகனை விட்டுவிடுங்கள் – விஜய் மல்லைய்யா வேண்டுகோள்!

879
0
SHARE
Ad

vijay mallyaலண்டன் – அரசுடமையாக்கப்பட்ட இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றவிட்டு, திருப்பி கட்டாமல் குடும்பத்துடன் இங்கிலாந்து சென்றுவிட்டார் விஜய் மல்லைய்யா. ஊடகங்களுடன் நேரடியாக பேசாமல் டுவிட்டர் வழியாக தனது கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது மகன் சித்தார்த்தும் டுவிட்டரில் இயங்கிவருகிறார். கடன் வாங்கிவிட்டு ஏமாற்றிய விஜய் மல்லைய்யாவையும், அவரது மகனையும் பொதுமக்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் வழியாக கண்டப்படி திட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் மல்லைய்யா தனது டுவிட்டர் பக்கத்தில் “என் மகன் சித்தார்த் உங்களின் திட்டுகளுக்கு பொருத்தமற்றவர். என் தொழிலுக்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. திட்ட வேண்டுமானால் என்னை திட்டுங்கள். அவனை திட்ட வேண்டாம்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.