Home Featured இந்தியா கிரிக்கெட் டி20 – சிறப்பாக விளையாடியும் இந்தியா அதிர்ச்சித் தோல்வி! வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளில்...

கிரிக்கெட் டி20 – சிறப்பாக விளையாடியும் இந்தியா அதிர்ச்சித் தோல்வி! வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளில் வெற்றி!

778
0
SHARE
Ad

மும்பை – நேற்றிரவு இங்கு நடைபெற்ற கிரிக்கெட் டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியா – வெஸ்ட் இண்டீசுக்கு இடையிலான ஆட்டம், இந்தியாவுக்கு சாதகமாகத் தொடங்கி, பரபரப்பான கட்டத்தை அடைந்து, இறுதியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியை அடைந்தது.

இந்தியாவின் தோல்வியைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தைச் சந்திக்கும்.

Cricket-India-West Indiesநேற்றைய முதல் பாதி ஆட்டத்தில், 20 ஓவர்களை நிறைவு செய்தபோது, 192 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து 193 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 3 ஓவர்களை இழந்து கடைசி ஒரு ஓவரில் 8 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய பரபரப்பான கட்டத்திற்கு ஆட்டத்தை நகர்த்திச் சென்றது.

கடைசி ஓவரில் வீராட் கோலி பந்து வீச, வெஸ்ட் இண்டீஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கடைசி இரண்டு பந்துகள் இருக்கும் நிலையில் 196 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.