புதுடெல்லி – வங்கிகளுக்கு ரூ. 4000 கோடி தருவதாக கூறியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லைய்யா, தற்போது, தான் தொடர்ந்துள்ள ஒரு வழக்கின் மூலம் கிடைக்கும் ரூ. 2000 கோடியையும் வங்கிக் கடனை அடைக்கத் தருவதாக கூறியுள்ளார்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 17 வங்கிகளிடமிருந்து ரூ. 9091 கோடி வர கடன் வாங்கியுள்ளார் விஜய் மல்லைய்யா. இந்த கடனை அவர் செலுத்தாமல் விட்டதால் வங்கிகள் தற்போது பல்வேறு இடங்களில் முறையிட்டுள்ளன. இதில் லுச்சநீதிமன்றமும் ஒன்று.
தற்போது மல்லைய்யா இங்கிலாந்தில் உள்ளார். இந்நிலையில் மல்லைய்யாவுக்கு எதிராக வங்கிகள் தொடர்ந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லைய்யா தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில், விஜய் மல்லையா வரும் செப்டம்பர் இறுதிக்குள் ரூ. 4000 கோடியை திருப்பிச் செலுத்தத் தயாராக உள்ளார்.
அதேபோல இன்னொரு வழக்கில் அவர் வெற்றி பெற்றால் அவருக்கு ரூ. 2000 கோடி கிடைக்கும். அதையும் வங்கிக் கடனுக்குத் திருப்பிச் செலுத்தத் தயாராக உள்ளார் என்று தெரிவித்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வங்கிகளுக்கு முச்சநீதிமன்றம்நோட்டீஸ் அனுப்பி வழக்கையும் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.