Home Featured தமிழ் நாடு நட்சத்திரக் கிரிக்கெட்: கேப்டன்களின் ஊர்கள் வெளியீடு!

நட்சத்திரக் கிரிக்கெட்: கேப்டன்களின் ஊர்கள் வெளியீடு!

457
0
SHARE
Ad

nadigar-sangam-cricketசென்னை – நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது.

சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. மேலும் நேற்று இரவு நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் கோப்பையையும் அறிமுகம் செய்து விட்டனர். இந்நிலையில் 6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன்? என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சூர்யா- சென்னை சிங்கம்ஸ்; விஷால் – மதுரை காளைஸ், ஆர்யா – சேலம் சீட்டாஸ், சிவகார்த்திகேயன் – திருச்சி டைகர்ஸ், ஜெயம் ரவி – நெல்லை ட்ராகன்ஸ், கார்த்தி – கோவை கிங்ஸ், விஜய் சேதுபதி – ராம்நாடு ரைனோஸ், ஜீவா – தஞ்சை வாரியர்ஸ் என கேப்டன்களுக்கு ஊர்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த கிரிக்கெட் போட்டியை நடிகர் சிவா, குஷ்பூ இருவரும் தொகுத்து வழங்குவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு நடிகரின் சொந்த மாவட்டத்துடன் இந்தத் தகவல்கள் ஒத்துப் போவது குறிப்பிடத்தக்கது.