Home Featured கலையுலகம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் லண்டனில் தடுத்து வைக்கப்பட்டார்!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் லண்டனில் தடுத்து வைக்கப்பட்டார்!

599
0
SHARE
Ad

akshaykumarலண்டன் – பாலிவுட்டின் முன்னணி நாயகனும், தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.ஓ பட வில்லனுமான அக்‌ஷய் குமார், லண்டன் போலீஸாரால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அக்‌ஷய் குமார் ஏப்ரல் 6-ஆம் தேதியான நேற்று மும்பையிலிருந்து லண்டனுக்கு தனது உதவியாளருடன் சென்றுள்ளார்.

லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் அக்‌ஷய் குமாரின் விசாவை சோதனை செய்த போது அது முறையான ஆவனங்கள் இன்றி இருக்கவே அவரைத் தடுத்து வைத்துள்ளனர். ஐரோப்பா நாடுகளின் சட்டப்படி சுற்றுலாவாசியாக செல்லும் நபர்களுக்கு விசா அவசியமில்லை.

அதே சமயம் படிப்பு, வேலை உள்ளிட்ட காரணங்கள் கருதி செல்வோர், கண்டிப்பாக முறையான ஆவனங்கள் விசா அச்சிடப்பட்ட தகுந்த விசாக்களுடன் வரவேண்டும்.

#TamilSchoolmychoice

இங்கே அக்‌ஷய் குமார் சுற்றுலா வாசிகள் வருவது போல் தகுந்த ஆதாரமில்லா விசாவுடன் வந்துள்ளார். ஆனால் அவர் வந்தக் காரணம் ’ரஸ்டோம்’ என்னும் தனது அடுத்த பாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக என்பதால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கைது செய்யப்பட்டு விசாரிக்கும் அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரைச் சுற்றி கூட்டம் சூழவே தனியறையில் வைக்கும்படி கேட்க அதற்கும் விமான நிலைய போலீசார் ஒப்புக்கொள்ளாமல் போகவே தற்போது இன்னும் விசாரணை அறையில் எல்லா மக்களுடனும் காத்திருப்பில் இருக்கிறார். இது புதிதல்ல, வழக்கம் போல நடிகர்கள் வெளிநாடுகளில் விசா பிரச்சினையில் சிக்குவதும் தடுத்து வைக்கப்படுவதும் நடந்துகொண்டு தான் வருகின்றன.