Home Featured நாடு அதிகரிக்கும் வெயில் : பெர்லிஸ், பகாங் ஜெரண்டுட், தெமர்லோ பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன!

அதிகரிக்கும் வெயில் : பெர்லிஸ், பகாங் ஜெரண்டுட், தெமர்லோ பள்ளிகள் இன்று மூடப்படுகின்றன!

495
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடுமையான வெயிலால் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, பெர்லிஸ் மாநிலத்திலுள்ள பள்ளிகளும், பகாங் மாநிலத்திலுள்ள ஜெரண்டுட், தெமர்லோ மாவட்டத்திலுள்ள பள்ளிகளும் இன்று திங்கட்கிழமை மூடப்படுகின்றன.

தொடர்ந்து 72 மணி நேரத்திற்கும் மேலாக வெப்பநிலை இந்த வட்டாரங்களில் 37 டிகிரி சென்டிகிரேட்டுக்கும் கூடுதலாக இருந்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு முன்கூட்டியே எடுக்கப்படும் நடவடிக்கை இது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மாணவர்கள் இன்று வகுப்புகளுக்கு வரவேண்டியதில்லை என்றும், இந்த நாளுக்கு பதிலாக மாற்று வகுப்புகள் நடத்தப்பட வேண்டியதில்லை என்றும் அறிவித்துள்ள அமைச்சு ஆனால், பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து வகுப்பறை போதனை அல்லாத மற்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியது.

இந்த வட்டாரங்களில் உள்ள சம்பந்தப்பட்ட கல்வி இலாகாக்கள் இந்த உத்தரவைப் பின்பற்றும் அதே வேளையில், பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் வெளிப்புற நடவடிக்கைகளைக் கண்காணித்து வரவேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.