Home Featured இந்தியா கொல்லம் தீவிபத்து : மலேசியர்கள் யாரும் பாதிப்பா? மலேசிய தூதரகம் ஆராய்கிறது!

கொல்லம் தீவிபத்து : மலேசியர்கள் யாரும் பாதிப்பா? மலேசிய தூதரகம் ஆராய்கிறது!

912
0
SHARE
Ad

சென்னை – கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த தீ விபத்தைத் தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாராவது உள்ளனரா என்பதை சென்னையிலுள்ள மலேசியாவின் துணைத் தூதரகம் கேரள மாநில அரசுடன் இணைந்து ஆராய்ந்து வருகின்றது.

சென்னையில் மலேசியத் தூதரகத்தின் துணைத் தூதர் அகமட் பாஜாராசாம் அப்துல் ஜாலில் இதனை பெர்னாமா தகவல் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Narendra Modi- visiting-Kollam fire victimsகொல்லம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று இந்தியப் பிரதமர் மோடி முதல்வர் உம்மன் சாண்டியுடன் சந்தித்து ஆறுதல் கூறியபோது….

#TamilSchoolmychoice

மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, கண்டெடுக்கப்படும் உடல்கள் தீக்காயங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருப்பதால் மரணமடைந்தவர்களை அடையாளம் காணும் பணி சிரமமாக இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடற்கரை நகரான பரவூர் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நேற்று இரவு வரையிலான இறுதி நேரத் தகவல்களின்படி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ள வேளையில் 350 பேர் காயமடைந்துள்ளனர்.