Home Featured இந்தியா கொல்லம் வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது!

கொல்லம் வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது!

657
0
SHARE
Ad

KOLLAM FIREகொல்லம் – கேரள கொல்லம் கோவிலில் வாணவேடிக்கையின் போது ஏற்பட்ட வெடிவிபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் புட்டிங்கல் அம்மன் கோவிலில் வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 112 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ‘‘கோவில் நிர்வாகம் சார்பில் போட்டி போட்டு வாணவேடிக்கை நிகழ்த்த அனுமதி கேட்டனர்.

#TamilSchoolmychoice

ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை’’ என்று மாவட்ட ஆட்சியாளர் ஷினாமோல் கூறியுள்ளார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போட்டி வாணவேடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்து குறித்து, கேரள போலீசார் கோவில் நிர்வாகிகள் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி), மற்றும் 308 (கொலைக்கு உடந்தையாக இருத்தல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

KOLLAM FIRE,வெடிப்பொருள் ஒப்பந்தக்கார்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளதாக கேரள மாநில காவல்துறை உயரஅதிகாரி தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், “இச்சம்பவத்தில் போலீஸ் தவறு எதுவும் கிடையாது.

வாணவேடிக்கை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போலீஸ் தடுக்கவில்லை என்று எப்படி கேள்வி எழுப்ப முடியும். லட்சக்கணக்கான மக்கள் இங்கு குடியிருக்கும் போது, போலீஸ் நடவடிக்கை எடுத்து இருந்தால் மற்றொரு பிரச்சினையானது வெடித்து இருக்கும். எனவே, அனைத்து காரணிகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்,” என்று கூறினார்.