Home Featured தமிழ் நாடு தேமுதிக-தமாகா கட்சிகள் உடை வைகோ தான் காரணம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தேமுதிக-தமாகா கட்சிகள் உடை வைகோ தான் காரணம் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

594
0
SHARE
Ad

stalin-vaiko-600சென்னை – தேமுதிக-தமாகா உடைவதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் வைகோ தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 3-ஆவது நாளாக நேற்று சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, “தே.மு.தி.க.வை தொடர்ந்து த.மா.க.வில் இருந்தும் நிர்வாகிகள் வெளியேற ஆரம்பித்துள்ளார்கள். ஏற்கனவே தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியுடன்  இணைந்ததும் உடைய ஆரம்பித்தது”.

“இப்போது த.மா.கா. இணைந்ததும் அந்த கட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது. இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வைகோ, கருணாநிதியும்-ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்”.

#TamilSchoolmychoice

“ஆக, தமாகாவாக இருந்தாலும், தேமுதிகவாக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோ தான் காரணம்”.

“இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால், அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு” என்றார் ஸ்டாலின்.