Home Featured தமிழ் நாடு தேர்தலில் போட்டியிட மதுரை மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜன்செல்லப்பா!

தேர்தலில் போட்டியிட மதுரை மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜன்செல்லப்பா!

527
0
SHARE
Ad

admkமதுரை – தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா, தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மேயரானார் வி.வி. ராஜன்செல்லப்பா.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், மேயர் பொறுப்பை ராஜினாமா செய்த அவர் மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியிடம் அதற்கான கடிதத்தை அளித்தார். பின்னர் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

மேயரின் ராஜினாமாவை மாநகராட்சிக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதால், அதற்கான கூட்டத்தை கூட்ட அனுமதி கோரியும் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். மேயரின் ராஜினாமா ஏற்புக்குப் பிறகே பொறுப்புகளை ஆணையர் அல்லது துணை மேயர் கவனிப்பர் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice