Home Featured தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஜோதிமணி அதிரடி நீக்கம்!

காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக ஜோதிமணி அதிரடி நீக்கம்!

542
0
SHARE
Ad

jyothimaniசென்னை – காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய ஜோதிமணி அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். கரூரில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி இழிவாக பேசியது, கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவது போன்ற செயல்பாடுகள் காரணமாக அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, ஜோதிமணி காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.