Home Featured வணிகம் ரயானி எர் மூன்று மாதங்களுக்குத் தற்காலிக நிறுத்தம் – டிசிஏ அறிவித்தது!

ரயானி எர் மூன்று மாதங்களுக்குத் தற்காலிக நிறுத்தம் – டிசிஏ அறிவித்தது!

895
0
SHARE
Ad

Rayaniairகோலாலம்பூர் – ஷரியா கோட்பாடுகளுடன் கூடிய விமான நிறுவனமான ரயானி ஏரின் இயக்கங்கள், மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை (டிசிஏ) அறிவித்துள்ளது.

டிசிஏ இயக்குநர் அசாருடின் அப்துல் ரஹ்மான் தற்காலிக நிறுத்தத்திற்கான அறிக்கையை இன்று ரயானி ஏர் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

 

#TamilSchoolmychoice

இன்று முதல் இந்த நடவடிக்கை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ரயானி ஏர் நிறுவனத்தின் தலைவர் ரவி அழகேந்திரன் விடுத்த அறிக்கையில், விமானிகளின் வேலைநிறுத்தம் காரணமாக ரயானி ஏர் தற்காலிக நிறுத்தம் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.