Home Featured தமிழ் நாடு விருதாச்சலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம்: ஹெலிகாப்டரில் செல்கிறார் ஜெயலலிதா!

விருதாச்சலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம்: ஹெலிகாப்டரில் செல்கிறார் ஜெயலலிதா!

702
0
SHARE
Ad

jayahelicopterlongசென்னை – முதலமைச்சர் ஜெயலலிதா விருதாச்சலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, 13 அதிமுக வேட்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் செல்கிறார்.

மே 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் 21 அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்நிலையில் 2-ஆவது நாளாக இன்று கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற்று பேசவுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்காக அவர் மதியம் 1 மணிக்கு சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விருதாச்சலம் புறப்படுகிறார். கருவேப்பிலங்குறிச்சியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.

விருதாச்சலம், நெய்வேலி, பன்ரூட்டி, கடலூர், உள்ளிட்ட 13  தொகுதிகளில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அவர் ஆதரித்து பேச உள்ளார். ஜெயலலிதா வருகையை ஒட்டி விருதாச்சலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.