கோலாலம்பூர் – கொல்லம் பரவூர் புட்டிங்கல் அம்மன் ஆலய தீவிபத்தைத் தொடர்ந்து மலேசிய அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மலேசிய அரசாங்கத்தின் அனுதாபங்களை, அதன் சார்பில், மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதன் தொடர்பில் டாக்டர் சுப்ரமணியம் கேரளாவின் முதலமைச்சர் உம்மன் சாண்டியுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு தனது அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றார் என சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் அகமட் பாஜாராசாம் தெரிவித்திருக்கின்றார்.
மலேசிய அரசாங்கத்தின் அனுதாபங்களை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் டாக்டர் சுப்ரா தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் கொல்லம் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் மலேசியர்கள் யாரும் இருக்கின்றனரா என ஆராயப்பட்டு வருகின்றது.