Home Featured கலையுலகம் ஜீ.வி.பிரகாஷின் ‘பென்சில்’ பட முன்னோட்டம் வெளியீடு!

ஜீ.வி.பிரகாஷின் ‘பென்சில்’ பட முன்னோட்டம் வெளியீடு!

785
0
SHARE
Ad

Pencil-tamil-movie-G._V._Prakash_Kumar-Sri_Divya-2சென்னை – ஜீ.வி.பிரகாஷ் முதல்முதலாக நடிகரானது பென்சில் படத்தில்தான். டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா படங்கள் வெளியாகி, ஜீ.வி.பிரகாஷ் நடிகரான பிறகும் பென்சில் படம் வெளியாகவில்லை. தற்போது அவரது சினிமா நிலவரம் சிறப்பாக இருப்பதால் பென்சில் படத்தை வெளியிட தயாராகிவிட்டனர் படக்குழு.

படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு பென்சிலுக்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. பென்சில் படமும், பள்ளியில் படிக்கும் ஜீ.வி.பிரகாஷும், ஸ்ரீதிவ்யாவும் செய்யும் காதலை பின்புலமாகக் கொண்டுள்ளது.

அதனால், குழந்தைகள் பெற்றோர்கள் துணையுடன் பார்க்கத்தகுந்த யு/ஏ சான்றிதழை சென்சார் அளித்துள்ளது. தற்போது, இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

#TamilSchoolmychoice