Home Featured தமிழ் நாடு இலங்கை சிறையிலிருந்த 96 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்!

இலங்கை சிறையிலிருந்த 96 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்!

629
0
SHARE
Ad

fishermen_27காரைக்கால் – இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 96 தமிழக மீனவர்கள் இன்று சொந்த ஊர் திரும்பினர். கடலோர காவல் படையின் 2  ரோந்து கப்பல்கள் முலம் காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 99 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு இருந்தது.

இதனை அடுத்து இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சோந்த 19 பேர் இராமேஸ்வரத்தை சேர்ந்த 49 பேர் தூத்துக்குடியைச் சேர்ந்த 20 பேர் என 96 மீனவர்கள் இலங்கையில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டனர்.

#TamilSchoolmychoice

மதியம் அனைத்துலக கடல் பகுதியில் 96 மீனவர்களையும் இலங்கை கடற்படை இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்படைத்தனர். மீனவர்கள் கடலோர காவல் காவல் படையின் ராணி துர்காவதி அபீக் என்ற 2ரோந்து கப்பல்கள் முலம் காரைக்கால் துறைமுகம் அழைத்து வரப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்