
இந்நிலையில், பிரிஜ்ஜோவைச் சுட்டுக் கொன்ற கடற்படையினரைக் கைது செய்யும் உடலை வாங்க மாட்டோம் என அவரது ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். என்றாலும், மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட மறுத்துவிட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றநிலை நீடித்து வருகின்றது.
இந்நிலையில், பிரிட்ஜ்ஜோவின் உடலில் பாய்ந்திருப்பது ஏ.கே.47 இரக துப்பாக்கிக் குண்டு என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. கழுத்தில் குண்டு பாய்ந்து சுமார் 1 மணி நேரம் உயிருக்குப் போராடிய நிலையில் பிரிஜ்ஜோ இறந்திருப்பது அவருடன் உடன் சென்ற மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இது குறித்து மண்டபம் காவல்நிலையத்தில் மீனவர்கள் சார்பில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது.