Home Featured கலையுலகம் வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு!

வரலட்சுமியின் பெண்கள் பாதுகாப்பு அமைப்பு – முன்னணி நடிகர்கள் ஆதரவு!

1100
0
SHARE
Ad

Varuசென்னை – உலக மகளிர் தினமான இன்று புதன்கிழமை, பெண்களை பாதுகாக்கும் ‘சேவை சக்தி – Save Sakthi’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதோடு, பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கினார். இதில் முன்னணி நடிகர்கள், நடிகைகளோடு, ஏராளமான பொதுமக்களும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் விஷால், ஜெயம்ரவி, பிரசன்னா, இயக்குநர் மிஷ்கின், சினேகா, தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

அண்மையில், நடிகை பாவனா அவரது முன்னாள் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான செய்திகள் வெளியான போது, தொலைக்காட்சி நிர்வாகி ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வரலட்சுமி வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.