Home இந்தியா அயோத்தி ராமர் கோவில் : 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 51 அங்குல உயரம்...

அயோத்தி ராமர் கோவில் : 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 51 அங்குல உயரம் பாலராமர் சிலை

558
0
SHARE
Ad

புதுடில்லி :  திங்கட்கிழமை (ஜனவரி 22) இந்தியாவின் அயோத்தியா நகரில் பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ள நிலையில் அந்த ஆலயம் குறித்த சில தகவல்கள்:

*நரேந்திர மோடி தமிழ் நாட்டுக்கு வருகை தந்து நேற்று கெலோ விளையாட்டுப் போட்டிகளைத் திறந்து வைத்தார்.

*இன்று ராமேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தந்து அங்கு சில நிகழ்ச்சிகளிலும் ஆலய வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

*அதன் பின்னரே புதுடில்லி திரும்பி அயோத்தியா ராமர் ஆலய விழாவில் கலந்து கொள்கிறார்.

*இந்த வரலாற்றுபூர்வ சம்பவத்திற்காக 11 நாட்கள் விரதம் இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

*ராமர் குழந்தையாக தங்க வில் மற்றும் அம்புகளை ஏந்தியவாறு நிற்கும் வண்ணம் சிலை அமைந்துள்ளது.

*51 அங்குலம் உயரம் கொண்ட இந்த குழந்தை ராமர் சிலையை மைசூர் சிற்பி அருண் யோகிராஜ் வடித்துள்ளார்.

*கருவறையில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை 300 கோடி ஆண்டு பழமையான தென்னிந்தியாவின் மைசூரில் உள்ள கல்லில் வடிக்கப்பட்டது. இதனை  ஓய்வுபெற்ற புவியியல் பேராசிரியர் சி. ஸ்ரீகந்தப்பா தெரிவித்துள்ளார்.

*மைசூர் மாவட்டத்தில் உள்ள குக்கேகவுடனாபுராவில் செயல்படும் குவாரியில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து ராமர் சிலை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பாறைகள், இந்தியாவின் பிற பகுதிகளிலும் காணப்படுகின்றன.

*அயோத்தி ராமர் கோயிலில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16-ம் தேதி தொடங்கின. ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள 22-ம் தேதி வரை இந்த சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். இந்த பூஜையில் 11 புரோகிதர்கள் ஈடுபட்டுள்ளனர்.

*22-ம் தேதி மதியம் 12.20 மணி அளவில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜை மதியம் 1 மணி அளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*கருங்கல்லில் செதுக்கப்பட்ட 200 கிலோ எடையுள்ள குழந்தை ராமர் சிலை, ஆகம விதிமுறைப்படி ராமர் கோயிலுக்குள் வியாழக்கிழமை (ஜனவரி 18) கொண்டுவரப்பட்டு, கோயில் கருவறையில் நிறுவப்பட்டது.

*கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவர். எம்பிஏ படித்துள்ள இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சிற்பக் கலை மீதான ஆர்வத்தின் காரணமாக பணியில் இருந்து விலகி சிற்பங்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

*சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சுபாஷ் சந்திரபோசின் 30 அடி சிலை பிரதமர் மோடியை வெகுவாக கவர்ந்தது. அதனை பிரதமர் மோடி பாராட்டியதால், அதே சிலையை சிறிய அளவிலே செதுக்கி மோடிக்கு பரிசளித்தார். தற்போது அருண் யோகிராஜ் வடித்துள்ள 51 அங்குல உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலைதான் அயோத்தியா ராமர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.