Home நாடு ‘டான்ஸ்ரீ’ வணிகப் பிரமுகர் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

‘டான்ஸ்ரீ’ வணிகப் பிரமுகர் தொடர்புடைய இடங்களில் ஊழல் தடுப்பு ஆணையம் சோதனை

361
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அரசாங்கத் தேவைக்கான வாகனங்களை விநியோகிக்கும் குத்தகையைக் கொண்ட நிறுவனமும் அதன் உரிமையாளரான ‘டான்ஸ்ரீ’ அந்தஸ்து கொண்ட வணிகப் பிரமுகரும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் சோதனை நடவடிக்கையில் சிக்கியுள்ளனர்.

இந்த நபர் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினுக்கும் நெருக்கமானவர் என கருதப்பபடுகிறது.

அந்த டான்ஸ்ரீயின் இல்லம் மற்றும் 4 நிறுவனங்களை ஊழல் தடுப்பு ஆணையம் தன் சோதனை வளையத்துக்குள் கொண்டுவந்தது. இந்த நிறுவனங்களில் ஒன்று அரசாங்கத்திற்கு வாகனங்களையும் வாகன உபரிப் பாகங்களையும் விநியோகிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன. இதன் தொடர்பிலான நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகளும், துணை நிறுவனங்களின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.