Home Featured நாடு ஜாகிர் நாயக் சொற்பொழிவைத் தடை செய்ய காவல்துறைக்கு காலிட் உத்தரவு!

ஜாகிர் நாயக் சொற்பொழிவைத் தடை செய்ய காவல்துறைக்கு காலிட் உத்தரவு!

941
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘இஸ்லாமும் – இந்து சமயமும் ஓர் ஒப்பீடு’ என்ற தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாயக் ஆற்றவிருக்கும் உரை குறித்து மலேசியாவில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், அந்நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்க வேண்டாம் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

12961635_1185947138082787_3999545278973733423_nஇது குறித்து அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு, அந்நிகழ்ச்சியை அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், காவல்துறையின் இம்முடிவிற்கு மலேசிய இந்து தர்ம மாமன்றம் தனது பேஸ்புக் பக்கம் வாயிலாக நன்றிகளைத் தெரிவித்துள்ளது.