Home Featured இந்தியா இந்தியாவில் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி! (புகைப்படங்களுடன்)

இந்தியாவில் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி! (புகைப்படங்களுடன்)

747
0
SHARE
Ad

Kensington Palace Twitter_filesமும்பை – இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன் தம்பதி ஏழு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தனர். இந்தியாவிற்கு அவர்கள் வருவது இதுவே முதல் முறையாகும்.

நேற்று மும்பை வந்தடைந்த வில்லியம் – கேட் தம்பதி, பிரபல தாஜ் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2008 ஆம் ஆண்டு, அந்தத் தங்கும்விடுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த நினைவாலயத்தைப் பார்வையிட்ட அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Kensington Palace,.,பின்னர், தொண்டு நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் கலந்துகொண்டார்.சச்சினும், வில்லியம் மனைவி கேட்டும் கிரிக்கெட் விளையாடி, அங்கிருந்த குழந்தைகளை குதூகலப் படுத்தினர்.

#TamilSchoolmychoice

Kensington Palace,

பின்னர், மாலையில் மும்பை தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் அளித்த வரவேற்பு மற்றும் விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

William Kate visit 1இது குறித்து, டெல்லியில் உள்ள இங்கிலாந்தின் தலைமைத் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அரச குடும்ப தம்பதி இந்தியாவில் தங்கியிருக்கும் இந்த ஒருவார காலத்தில் கிரிக்கெட், இந்தி சினிமா, அரசியல் மற்றும் குடும்பம் என 4 விதமான உணர்வுகளை பெறுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளின் உறவும் பலப்படும் என்றும் இங்கிலாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

Kensington Palaceமும்பை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு வில்லியம் கேட் தம்பதி டெல்லி செல்கின்றனர். டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் அவர்கள், அரசியல் தலைவர்களையும் சந்திக்கின்றனர்.

வரும் 17-ஆம் தேதி வரை அரசு விருந்தினர்களாக இந்தியாவில் தங்கவுள்ள அவர்கள், கவுகாத்தி, ஆக்ரா உள்ளிட்ட இடங்களுக்கும் செல்ல இருக்கின்றனர்.

அதன் பின்னர், பூடான் நாட்டுக்கு செல்லும் வில்லியம் தம்பதியினர் அந்நாட்டின் மன்னரையும், பூடான் ராணியையும் சந்திக்கவுள்ளனர்.

William Kate visitபின்னர் மீண்டும் இந்தியா திரும்பும் அவர்கள் காதலின் நினைவுச்சின்னமாக போற்றப்படும், உலக அதிசயங்களில் ஒன்றான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிடுகின்றனர்.

அதனை முடித்துக் கொண்டு அவர்கள் நாடு திரும்புவார்கள் என்று இங்கிலாந்து தூதரகம் சார்பில் தகவல்கள் கூறுகின்றன.