Home Featured தமிழ் நாடு கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு நான் எதிரி; ஸ்டாலினுக்கு அவர்தான் எதிரி – விஜயகாந்த் ஆவேசப்பேச்சு!

கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு நான் எதிரி; ஸ்டாலினுக்கு அவர்தான் எதிரி – விஜயகாந்த் ஆவேசப்பேச்சு!

507
0
SHARE
Ad

vijayakanth_2_1சென்னை – கருணாநிதி-ஜெயலலிதாவிற்கு நான்தான் எதிரி என தேமுதிக தலைவர் விஜய்காந்த் ஆவேசமாக பேசியுள்ளார். சென்னையை அடுத்த மாமண்டூரில் தேமுதிக – மக்கள்நலக் கூட்டணியின் மாநாடு நடைபெற்றது.

இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசும் போது, கருணாநிதிக்கு ஜெயலலிதா எதிரி, ஜெயலலிதாவிற்கு கருணாநிதி எதிரி, ஆனால் கருணாநிதி-ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருக்கும் நான்தான் எதிரி என தெரிவித்தார். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரும் அவர் எண்ணங்களும் தான் என குறிப்பிட்டார் விஜய்காந்த்.