Home Featured கலையுலகம் எனக்கு வில்லனே சூர்யாதான் – நடிகர் கார்த்தி!

எனக்கு வில்லனே சூர்யாதான் – நடிகர் கார்த்தி!

865
0
SHARE
Ad

surya-karthikசென்னை – சூர்யா, சமந்தா, நித்யா மேனன் நடிப்பில் விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 24. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நேற்று நடந்தது.

முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டன. சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து, நித்யாமேனன், இயக்குநர் ஹரி, விக்ரம் கே குமார், சிவகுமார், கார்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் படக்குழுவையும், படத்தையும் வாழ்த்திப் பேசினர்கள்.

அப்போது நடிகரும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பேசுகையில், இந்த 24 படத்தை கொஞ்சம் நான் பார்த்தேன். இந்தப் படத்துல மணின்னு ஒரு பையன் நடிச்சிருக்கான் ஹீரோவா, கஜினி படம் சுட்டும் விழிச் சுடரே பாட்ட நான் ஏ.வி.எம் ஸ்டூடியோவுல பார்த்தேன்.

#TamilSchoolmychoice

பாட்ட பார்த்தோனையுமே சொன்னேன், சூர்யாவ பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு. அவ்ளோ அழகா இருந்தாரு. அப்பறம் ஒரு வில்லன் நடிச்சிருக்காரு. ஒரு பத்து வயசு வரைக்கும் எனக்கு வில்லனா இருந்தது என்னோட அண்ணன் தான். ஆனால் இப்போ இந்த படத்துல வேறமாதிரி என கூறி, 24 படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.