Home Featured இந்தியா இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு விருந்தளித்தார் மோடி!

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதிக்கு விருந்தளித்தார் மோடி!

664
0
SHARE
Ad

modiபுதுடெல்லி –  இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மிடில்டன் தம்பதியினர்  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.

கடந்த 10-ஆம் தேதி மும்பை வந்த அந்த தம்பதியினர், அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மும்பையில் பயணத்தை முடித்துகொண்டு டெல்லி வந்த அவர்கள் மகாத்மா காந்தியின் வாழ்விடத்தை பார்வையிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த வில்லியம்-கேட் தம்பதியினர், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அரசு தம்பதியினரை கவுரவித்து மோடி விருந்தளித்தார்.

#TamilSchoolmychoice

இதனை தொடர்ந்து டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். பூட்டானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர்கள் ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்டு பயணத்தை நிறைவு செய்கின்றனர்.