Home Featured தமிழ் நாடு சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிக அணிக்கு – திமுக 3 தொகுதிகள் ஒதுக்கியது

சந்திரகுமார் தலைமையிலான மக்கள் தேமுதிக அணிக்கு – திமுக 3 தொகுதிகள் ஒதுக்கியது

626
0
SHARE
Ad

சென்னை – தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்த அதிருப்தியாளர்களைக் கொண்ட சந்திரகுமார் தலைமையிலான அணிக்கு திமுக கூட்டணியின் 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

mdmdk-leadersmetkalaignar--2இதிலிருந்து, சந்திரகுமார் அணியை உடைத்ததில், பின்னணியில் திமுகவின் பங்கு இருந்தது என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

முக்கிய கட்சிகளை இணைக்க முடியாமல், மெகா கூட்டணி அமைக்க முடியாமல் தடுமாறும் திமுக, மக்கள் நலக்கூட்டணியின் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், வருகின்ற எல்லா சிறிய கட்சிகளையும் இணைத்துக் கொள்வதில் மும்முரம் காட்டி வருகின்றது.

#TamilSchoolmychoice

Karunanithi-Ponkumar-Farmer party-allocated-seatபொன்குமார் தலைமையிலான விவசாயிகள் கட்சிக்கு தொகுதி வழங்கும் உடன்பாடு…

இதே பாணியில், திமுக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள பொன்குமார் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைந்துள்ள பொன்குமாரின் விவசாய தொழிலாளர்கள் கட்சிக்கு கருணாநிதி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியை ஒதுக்கியுள்ளார்.

நேற்றுவரை இந்தக் கட்சி எங்கே இருந்தது, அதன் செயல்பாடுகள் என்ன என்பது போன்ற விவரங்கள் கூட யாருக்கும் தெரியாது. ஆனால், அந்தக் கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. அந்த அளவுக்கு அனைவரையும் இணைத்துக் கொள்வதில் திமுக கூட்டணி ஆர்வம் காட்டி வருகின்றது.

திமுக கூட்டணியில் இதுவரை இடம்பிடித்துள்ள கட்சிகளுக்கு மொத்தம் 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.