Home இந்தியா திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

1449
0
SHARE
Ad

சென்னை: திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன எனும் இட ஒதுக்கீடுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

வருகிற ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்கயிருக்கும் வேளையில், தேர்தலில் போட்டியிட இருக்கும், திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ்சுக்கு  10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும்மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

திமுக கட்சி இத்தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.