கலிபோர்னியா: இனையத்தில் காணப்படும் தவறான தகவல்களை அல்லது விளம்பரங்களை கூகுள் நிறுவனம் நீக்கி வருகிறது.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் 2018-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 230 கோடி விளம்பரங்களை தடை செய்துள்ளதாகவும், மேலும் இதுபோன்ற தவறுகள் இனி வரமால் இருக்க 31 புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 60 லட்சம் தவறான விளம்பரங்கள் தடை செய்யப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட விளம்பரங்கள் மீண்டும் தோன்றாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய கூகுள் விளம்பர குழு தலைவர் ஸ்காட் ஸ்பென்சர், “இதுபோன்ற தவறான விளம்பரங்களால் கூகுள் நிறுவனத்தின் நற்பெயர் கெடுவதோடு, இது போன்ற விளம்பரங்களை நீக்கி எல்லோரும் பயன்படுத்தும் இணைய சூழலை உருவாக்க செயல்பட்டு வருகிறோம்” என்றார்.