Home கலை உலகம் “மகாபாரதம் படமாக்கப்பட்டால், அதுவே எனது கடைசிப் படமாக அமையும்”- ராஜமௌலி

“மகாபாரதம் படமாக்கப்பட்டால், அதுவே எனது கடைசிப் படமாக அமையும்”- ராஜமௌலி

1285
0
SHARE
Ad

ஹைதரபாத்: பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமௌலி உலகளவில் பிரபலமடைந்துள்ள நிலையில், அவ்ர் எப்போது மகாபாரதம் படத்தினை எடுப்பார் எனும் கேள்விகள் எழுந்த வண்ணமாகவே இருந்தன. ஒருவேளை, மகாபாரதத்தைப் படமாக எடுத்தால் அது தமது கடைசிப் படமாக இருக்கும் என இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார்.

தற்போது, ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர்என்ற படத்தை இயக்கி வருகிறார். நேற்று வியாழக்கிழமை, ஹைதராபாத்தில், அத்திரைப்படம் பற்றிய முதல் பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

மகாபாரதம் எப்போதும் தம் மனதில் ஓடிக்கொண்டே இருக்குமெனக் கூறிய அவர், 24 மணி நேரமும் மூளையின் ஒரு பகுதியில் அது பற்றிய சிந்தனை இருந்துக் கொண்டே இருக்கும் என்றார்.