Home One Line P2 விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

588
0
SHARE
Ad

சென்னை: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, முஸ்லிம் லீக்கிற்கு 3, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

#TamilSchoolmychoice

இன்றைய முடிவில் அதிருப்தி இருந்த போதிலும், பாஜக போன்ற இனம், சாதியைக் கொண்டு தமிழ் நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் கட்சிகள் வராமல் இருப்பதைத் தடுக்க இந்த கூட்டணி அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.