Home இந்தியா கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்த எழுத்தாளர் வெங்கடேசன் மதுரையில் போட்டி!

கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்த எழுத்தாளர் வெங்கடேசன் மதுரையில் போட்டி!

1269
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவருமான சு. வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்,  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினருமான இவர், கடந்த 29 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 28 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு நேற்று வெள்ளிக்கிழமை திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகள் குறித்த அறிவிப்பில் வெளியிடப்பட்டது.

கடந்த 2011-ஆம் ஆண்டு, வெங்கடேசன் எழுதியகாவல் கோட்டம்நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இது இவரது முதல் படைப்பாகும்.  நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்ததமிழ், கதைகளின் கதை, உட்பட 16 நூல்களை இவர் இயற்றியுள்ளார். சமீபத்தில் தமிழ் வார இதழில் 119 வாரங்கள் வெளியானவீரயுக நாயகன் வேள்பாரிஎன்றநாவலின்ஆசிரியர் பணியையும் இவர் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மிக முக்கியமாக, தமிழரின் தொல் நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வு பிரச்சனையை உலகறியச் செய்ததில், முதன்மை பங்கு இவருக்கு உண்டு.