Home நாடு சிலாங்கூர்: வீட்டு விலைகளை கண்காணிக்கும் செயற்குழு நியமனம்!

சிலாங்கூர்: வீட்டு விலைகளை கண்காணிக்கும் செயற்குழு நியமனம்!

1251
0
SHARE
Ad

ஷா அலாம்: எதிர்காலத்தில் சிலாங்கூரில் அமைக்கப்படும் வீடுகளின் விலைகளை கண்காணிப்பதற்காக சிறப்பு செயற்குழு ஒன்று அமைக்கப்படும் என சிலாங்கூர் மாநிலத்தின் வீட்டு வசதி மற்றும் நகர்புற குடியேற்ற ஆட்சிக் குழு உறுப்பினர் ஹனிபா முகமட் தால்ஹா கூறினார். குறிப்பாக, ‘ரூமா சிலாங்கூர்க்கு’ திட்டம் வாயிலாக கட்டப்படும் வீடுகளின் விலைகள் கவனிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

கட்டுமான செலவுகள் போக, விற்பனை விலை அடிப்படையில் குத்தகையாளர்களுக்கு கிடைக்கப்படும் உண்மையான இலாபத்தைக் கண்காணிக்க இந்த குழு உதவும் என அவர் தெளிவுப்படுத்தினார். அதிக இலாபத்திற்கு வீடுகளின் விலைகளை விற்பதால் மக்கள் அவற்றை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருவதை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், வீடுகளின் விலை அதிகரித்து வருவதாக வெளியிடப்படும் தகவல்களை கண்காணிக்கவும் இந்த குழு செயல்படும் என அவர் தெரிவித்தார்.

வீடு கட்டுமானப் பணிகளுக்கான செலவினங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக குத்தகையாளர்களிடமிருந்து புகார் பெற்றுள்ளோம். அதனால், அவர்கள் அதிகமான இழப்புகளைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே, இம்மாதிரியான நிலைமைகளை கண்காணிக்கும் சிறப்புக் குழுவை நாங்கள் உருவாக்கியுள்ளோம்என அவர் கூறினார். மக்களும் வீடுகளின் விலை அதிகரிப்பு விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக் இந்த குழு அமைக்கப்பட்டதாக அவர் கூறினார்.