Home நாடு “மக்களுக்கு நல்லதை செய்யத் தவறினால் அவமானப்படக் கற்றுக் கொள்ளுங்கள்!” -பிரதமர்

“மக்களுக்கு நல்லதை செய்யத் தவறினால் அவமானப்படக் கற்றுக் கொள்ளுங்கள்!” -பிரதமர்

1069
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்நாட்டு இளைஞர்கள் கடமையைச் செய்யத் தவறினால் அதற்காக அவமானப்படுவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

ஜப்பானியர்கள் தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்ற தவறிவிட்டால், இயற்கையாகவே அவமானம் என்ற உணர்வைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதனால்தான், இரண்டாம் உலகப்போரில் முழுமையாக அழிந்த ஜப்பான் நாடு, தற்போது மக்களின் வாழ்க்கை முறையிலும், நாட்டின் வளர்ச்சியிலும் மேலோங்கி நிற்கிறது என அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய மக்கள் ஜப்பான் நாட்டினை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும், தேர்வுகளில் தோல்வியடைவதை மட்டும் அவமானமாகக் கொள்ளாமல், மக்களுக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்யத் தவறினாலும் அவமானப்படக் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இம்மாதிரியான உணர்வுகளோடு, நாட்டின் அடுத்த தலைமுறையினர், விடாமுயற்சியுடன் செயல்பட்டால், 2025-க்குள் வளர்ச்சி அடைந்த நாடுகள் பட்டியலில் இடம் பெறுவதற்காக அரசாங்கத்தின் திட்டம் சுமுகமாக நிறைவேறும் என பிரதமர் கூறினார்.