Home Featured நாடு ஜி.கே.சாமி மறைவு: ‘இன்முகத்தோடு கலகலப்பூட்டியவர்’ நண்பர்கள் அனுதாபம்!

ஜி.கே.சாமி மறைவு: ‘இன்முகத்தோடு கலகலப்பூட்டியவர்’ நண்பர்கள் அனுதாபம்!

622
0
SHARE
Ad

கிள்ளான் – நேற்று கிள்ளான் நகரில் வணிகப் பிரபலங்களுள் ஒருவராகத் திகழ்ந்த ஜி.கே.சாமி ஒரு கார்விபத்தில் காலமானார் என்ற செய்தி பரவத் தொடங்கியபோது, அவரை அறிந்தவர்கள் மத்தியிலும், அவரது நண்பர்கள் மத்தியிலும் சோகமும், வருத்தமும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

G.K.Samyஎப்போதுமே சிரித்த முகத்துடனும், கலகலப்பான பொது நிகழ்ச்சிகளில் உலா வரும் அவர், அனைத்துத் தரப்புகளோடும் அணுக்கமும், நெருக்கமும் பாராட்டி வந்தவர். அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

கோட்டைசாமி என்ற முழுப்பெயர் கொண்டவர் அனைவராலும் ஜி.கே.சாமி என சுருக்கமாக அழைக்கப்பட்டார். வெடித்துக் கிளம்பும் சிரிப்பொலியுடன் கூடிய அவரது உற்சாகத்தை நீண்ட நாளைக்கு அவரது நண்பர்கள் மறக்க மாட்டார்கள்.

#TamilSchoolmychoice

கிள்ளான் வட்டாரத்தில், ஜவுளி, உணவகம், உலோக மறு சுழற்சி என பல தொழில்களில் அவர் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்தவர். கோலாலம்பூரிலும், கிள்ளான் பள்ளத்தாக்கிலும் நிறைய நண்பர்களைக் கொண்டிருந்தார் அவர்.

தமிழகத்திலிருந்து திரும்பியிருந்த அவர், நேற்று புதன்கிழமை ஏப்ரல் 13ஆம் நாள் காலை  ஒரு கார்விபத்தில் அகால மரணமடைந்தது அவரது குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று ஏப்ரல் 14, வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியிலிருந்து 5.00 மணிவரை கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் நடைபெறும். பின்னர் அன்னாரின் நல்லுடல் சிம்பாங் லீமா இந்து மயானம் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகள் நடைபெறும் முகவரி:

எண் 88, லெபோ செம்பிலாங் -2 

தாமான் தெலுக் பூலாய்

43100 கிள்ளான்

தொடர்புக்கு:

012-2343575

012-7885003

017-3641328