Home Featured நாடு சரவாக் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 25; வாக்களிப்பு மே 7!

சரவாக் தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 25; வாக்களிப்பு மே 7!

553
0
SHARE
Ad

Sarawak-Election-300x202கூச்சிங் : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்களிப்பு மே 7ஆம் தேதி நடைபெறும் என்றும் மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

முன்கூட்டியே வாக்களிப்பவர்களுக்கான வாக்களிப்பு நாளாக மே 3 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சரவாக்கின் 11வது சட்டமன்றத் தேர்தலாகும்.

#TamilSchoolmychoice

சரவாக் மாநிலத்தின் தலைநகர் கூச்சிங்கில் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா அறிவித்தார்.

82 சட்டமன்றத் தேதிகளைக் கொண்ட சரவாக் மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை 1,138,650 எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி சரவாக் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.