Home Featured தமிழ் நாடு கருணாநிதி-அழகிரி மீண்டும் 2வது முறையாக சந்திப்பு!

கருணாநிதி-அழகிரி மீண்டும் 2வது முறையாக சந்திப்பு!

768
0
SHARE
Ad

alagiri stalinசென்னை – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி சந்தித்துப் பேசியுள்ளது மீண்டும் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையக் காலத்தில் தனது தந்தையை அழகிரி சந்திப்பது இது இரண்டாவது முறையாகும். சில நாட்களுக்கு முன்னர் அழகிரி, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கருணாநிதியைச் சந்தித்திருந்தார்.

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க தான் வந்ததாக அழகிரி கூறியிருக்கும் வேளையில், அழகிரியின் சந்திப்பு குறித்து ஸ்டாலினிடமும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி தொடுத்தனர்.

#TamilSchoolmychoice

‘இதில் அரசியல் எதுவும் இல்லை. அவர் தந்தையைப் பார்க்க வந்திருக்கின்றார். வேறு ஒன்றும் இல்லை. தேர்தலைப் பற்றி வேண்டுமானால் கேளுங்கள் பதில் சொல்கின்றேன்.  மற்ற கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என ஸ்டாலின் காட்டமாக பத்திரிக்கையாளர்களிடம் கூறிவிட்டுச் சென்று விட்டார்.