Home நாடு சரவாக்: 82 தொகுதிகளில் 76-ஐ கைப்பற்றியது ஜிபிஎஸ்

சரவாக்: 82 தொகுதிகளில் 76-ஐ கைப்பற்றியது ஜிபிஎஸ்

702
0
SHARE
Ad

கூச்சிங் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 18) நடைபெற்ற சரவாக் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜிபிஎஸ் கூட்டணி மொத்தமுள்ள 82 தொகுதிகளில் 76 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

எதிர்க்கட்சியான பிஎஸ்பி 4 தொகுதிகளிலும் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜசெக 2 தொகுதிகளிலும்  வெற்றி பெற்றிருக்கிறது. பிகேஆர் கட்சிக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.

அதே போல, பக்காத்தான் கூட்டணி சார்பாக போட்டியிட்ட அமானா கட்சியும் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

#TamilSchoolmychoice

நேற்று நள்ளிரவு வரையில் 81 தொகுதிகளுக்கான முடிவுகளை மட்டுமே தேர்தல் ஆணையம் அறிவித்தது. மூலு சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவை, பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. எனினும் தாமதமாக அறிவிக்கப்பட்ட மூலு தொகுதியிலும் ஜிபிஎஸ் கூட்டணியே வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மலேசிய அரசியலில் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியாக ஜிபிஎஸ் உருவெடுத்துள்ளது. சரவாக் மாநிலத்தை மட்டும் குறி வைத்து முன்னிறுத்தி, சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றிகளை ஜிபிஎஸ் பதிவு செய்திருக்கிறது.