Home Featured நாடு “நாட்டை அழிக்கின்றார் நஜிப் – அவரைப் பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும்” – மகாதீர் வீதிமுனைப்...

“நாட்டை அழிக்கின்றார் நஜிப் – அவரைப் பதவியில் இருந்து வீழ்த்த வேண்டும்” – மகாதீர் வீதிமுனைப் பிரச்சாரம்!

585
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர் – நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நடைபெற்ற இரவு சந்தையில் வீதி வீதியாக நடந்து சென்று நஜிப்புக்கு எதிராக கையெழுத்துக்களைத் திரட்டிய முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தலைமையிலான குழுவினர், பின்னர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள செமுவா ஹவுஸ் அங்காடி முன்னர் திரண்ட சுமார் 200 பேர் கொண்ட கூட்டத்தினரிடையே உரையாற்றினர்.

துன் மகாதீரோடு இந்த வீதிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூகப் போராட்டவாதி அம்பிகா சீனிவாசன் தங்களுக்குக் கிடைத்து வரும் ஆதரவு தங்களுக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

articlesambiga_1909_600_400_100“நஜிப்புக்கு எதிரான கையெழுத்து வேட்டையில் இத்தனை பேர் முன்வந்து கையெழுத்திடுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. பலர் நடப்பது குறித்து வெறுப்படைந்துள்ளார்கள் என்பதையும், ஒரு நிலைப்பாட்டை எடுக்க அவர்கள் அச்சப்படவில்லை” என அம்பிகா கூறினார்.

#TamilSchoolmychoice

கூட்டத்தினரிடையே உரையாற்றிய மகாதீர், நஜிப்புக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பில் தனது கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.

“அவ்வளவு பணம் யாரிடம் உள்ளது? எங்களிடம் காட்டுங்கள். எந்த வங்கியில் இந்தப் பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது? எந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதால் இத்தனை பெரிய இலாபம் கிடைத்து அதன் மூலம் நஜிப்புக்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கொடுக்க முடிந்தது?” என மகாதீர் அடுக்கடுக்காக வினா தொடுத்தார்.

“நாட்டை அழிக்கப் பார்க்கின்றார் நஜிப். அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும்” எனக் கூறிய மகாதீர் மக்கள் நஜிப்பை அகற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அஸ்மின் அலி உரை

Azmin Aliமகாதீருக்குப் பின்னர் பேசிய சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி “நஜிப் அழிக்கின்றவர். தற்போது நாட்டின் பொருளாதாரத்தையும், அரசியலையும் அவர் அழித்துக் கொண்டிருக்கின்றார்” என சாடினார்.

“இது எங்களின் தனிப்பட்ட குரோதமோ, பழிக்குப் பழி வாங்கும் எண்ணமோ கிடையாது. மலேசியாவைக் காதலிக்கும் மலேசியர்களாகிய எங்களுக்கு மலேசியாவைக் காப்பாற்றும் பொறுப்புணர்வு இருக்கின்றது. பொறுத்தது போதும். இனி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவோம். நீங்கள் தயாரா?” என பலத்த கரவொலிக்கிடையில் அஸ்மின் முழங்கினார்.