Home Featured தமிழ் நாடு விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் – சீமான் பிரச்சாரம்!

விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும் – சீமான் பிரச்சாரம்!

912
0
SHARE
Ad

seemanதிருத்துறைப்பூண்டி – திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சரவணகுமாரை ஆதரித்து நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது சீமான் பேசியதாவது:- பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.

இங்கே போட்டியிடுபவர்கள் வேட்பாளர்கள் அல்ல, தலைவர்கள் அல்ல, உங்கள் வீட்டு பிள்ளைகள். அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும்.

#TamilSchoolmychoice

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். விவசாயம் கட்டாயமக்கப்படும். விவசாயிகளுக்கு அரசு வேலை வழங்கப்படும். விவசாயிகள் அனைவரும் அரசு ஊதியம் பெருவார்கள் என சீமான் பிரச்சாரம் செய்தார்.