Home Featured கலையுலகம் இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகிறது கபாலி!

இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகிறது கபாலி!

867
0
SHARE
Ad

Abdul malikகோலாலம்பூர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் மலேசியாவைக் கதைக் களமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘கபாலி’, இந்தோனேசியாவில் 300 திரையரங்குகளுக்கும் மேல் வெளியீடு காணவுள்ளது.

இதற்கான அறிவிப்பை, கபாலி திரைப்படத்தை மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ள மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன்ஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டத்தோ அப்துல் மாலிக் தனது பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ள முதல் தமிழ்த் திரைப்படம் இது என்பதையும் அப்துல் மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, தற்போது கபாலி படத்திற்கான பின்னணிக் குரல் பேசும் பணிகளை ரஜினிகாந்த் மேற்கொண்டு வருவதாகவும், வரும் மே 1-ம் தேதி கபாலி திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளையில், வரும் ஜூன் 3-ம் தேதி, உலகமெங்கும் கபாலி திரையீடு காணும் வாய்ப்பும் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

படம்: நன்றி (Dato Abdul Malik Facebook)