Home Featured கலையுலகம் நடிகையும், முன்னாள் மலேசிய அழகியுமான சமந்தா ஸ்குபெர்ட் காலமானார்!

நடிகையும், முன்னாள் மலேசிய அழகியுமான சமந்தா ஸ்குபெர்ட் காலமானார்!

584
0
SHARE
Ad

Samantha Schubert-deceasedகோலாலம்பூர் – 1991ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ்/மலேசிய அழகிப் போட்டியில் முதல் நிலை வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் வழி மலேசியர்களிடையே பிரபலமானவர் சமந்தா ஸ்குபெர்ட்.

அவரது கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோயின் தாக்கத்தால் அவர் இன்று மாலை 7.16க்கு காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிஸ் மலேசியா போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், கலப்பின அழகியான இவரது அழகும் நளினமும் பலரையும் கவர, பின்னர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கின்றார்.

#TamilSchoolmychoice

ஒலிவர் நோட்ஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்த அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர்.

47 வயதே ஆன அவர் இன்று காலமானதைத் தொடர்ந்து அவரது இரசிகர்களும், நண்பர்களும் நட்பு ஊடகங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் தங்களின் அனுதாபச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

Samantha Schubert-decd