Home Featured நாடு நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி ஏற்றார் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்!

நாடாளுமன்ற மேலவைத் தலைவராகப் பதவி ஏற்றார் எஸ்.ஏ.விக்னேஸ்வரன்!

684
0
SHARE
Ad

cc6bbd05-081a-470f-a8b1-e91def22bc86கோலாலம்பூர் – மஇகா உதவித்தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று நாடாளுமன்றத்தின் புதிய மேலவைத் தலைவராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு பதவி வகித்த டான்ஸ்ரீ அபு சஹார் உஜாங்கின் பதவிக் காலம் நேற்றோடு நிறைவடைந்ததையடுத்து, இன்று விக்னேஸ்வரன் அப்பதவி ஏற்றுள்ளார்.

விக்னேஸ்வரன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி செனட்டராக பதவி நியமனம் செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இன்று நாடாளுமன்ற துணைத்தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாலிம் அப்துல் சமத் முன்னிலையில், நாடாளுமன்றத்தின் 17-வது மேலவைத் தலைவராக விக்னேஸ்வரன் பதவி ஏற்றுக் கொண்டார்.