Home Featured தமிழ் நாடு கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.13.43 கோடியாம்: வேட்புமனுத்தாக்கலில் தகவல்!

கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ.13.43 கோடியாம்: வேட்புமனுத்தாக்கலில் தகவல்!

656
0
SHARE
Ad

karunanithiதிருவாரூர்  – திமுக தலைவர் கருணாநிதியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4.93 கோடியிலிருந்து ரூ.13.43 கோடியாக உயர்ந்துள்ளது.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:- கடந்த 10 ஆண்டுகளில் அரசு குடியிருப்பு ஏதும் ஒதுக்கீடு செய்யவில்லை. கையில் உள்ள ரொக்கம் ரூ.50,000. அசையா சொத்து எதுவும் கிடையாது. மனைவி தயாளு அம்மாளிடம் கையிருப்பு ரூ.10,000, துணைவியார் ராசாத்தி அம்மாளிடம் கையிருப்பு ரூ. 56,850.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு 14 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. வாகனங்கள், வீடு ஏதும் கிடையாது. தயாளு அம்மாளுக்கு 176 கிராம் தங்கம், ராசாத்தி அம்மாளுக்கு 640 கிராம் தங்கம் உள்ளன. ராசாத்தி அம்மாள் வங்கிக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11.94 கோடியும், கனிமொழிக்குத் தர வேண்டிய கடன் ரூ.1.17 கோடியும் உள்ளது.

#TamilSchoolmychoice

கருணாநிதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.43 கோடியாகவும், தயாளு அம்மாளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.52 கோடியாகவும், ராசாத்தி அம்மாளின் சொத்து மதிப்பு ரூ. 42 கோடியாகவும் உள்ளது.

கருணாநிதியின் சொத்து மதிப்பு 2011-இல் ரூ. 4.93 கோடியாகவும், தற்போது ரூ. 13.43 கோடியாகவும் அதிகரித்துள்ளது என வேட்புமனு தாக்கலில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.