Home Featured தமிழ் நாடு அதிமுகவைபோல நடிகர்களின் பிரச்சாரம் எங்களுக்கு தேவை இல்லை – மு.க.ஸ்டாலின்

அதிமுகவைபோல நடிகர்களின் பிரச்சாரம் எங்களுக்கு தேவை இல்லை – மு.க.ஸ்டாலின்

630
0
SHARE
Ad

stalin_59சென்னை – அதிமுக.வுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பிரச்சாரம் செய்ய தேவைப்படுகிறார்கள். எங்களுக்கு அப்படி தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோவை செல்லும் முன்பு மீனப்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி: 3–ஆம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டீர்கள். மக்கள் ஆதரவு எப்படி உள்ளது?

பதில்:– ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். எனவே 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

#TamilSchoolmychoice

கேள்வி:– மதுவிலக்கை படிப்படியாகத்தான் அமுல்படுத்த முடியும் என்றும், ஒரே கையெழுத்தில் மது விலக்கை கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் ஜெயலலிதா கூறி இருக்கிறாரே?

பதில்:– மிடாஸ் மது ஆலைக்காக அவர் அப்படி சொல்லி இருக்கலாம்.

கேள்வி:– அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த அளவுக்கு தி.மு.க.வில் சினிமா நட்சத்திர பேச்சாளர்கள் இல்லையே?

பதில்:– அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு குறைந்து வருகிறது. அதனால்தான் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் தேவைப்படுகிறது. எங்களுக்கு அப்படி தேவையில்லை. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே தமிழக மக்கள் இதற்கு நல்ல முடிவெடுப்பார்கள்.

கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிதி தஞ்சாவூர் பொதுக் கூட்டத்தில் பேசும் போது எனக்கு 90 வயதை கடந்து விட்டது. அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் விழுப்புரம் பொதுக் கூட்டத்தில் பேசும் போது, 100 வயதை கடந்தும் பொது மக்களுக்காக பாடுபட விரும்புகிறேன் என்று கூறியுள்ளாரே? என்று கேட்டனர்.

பதில்: அது கலைஞரின் மன வலிமையையும், இனிமையான எண்ணங்களையும் காட்டுகிறது என்று பதில் அளித்தார்.